• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மாநாடு..,

BySeenu

Jun 22, 2025

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தலைவரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் ப‌ அப்துல் சமது அவர்கள் கோவைக்கு பல்வேறு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மதுரையில் மாநாடு ஜூலை 6 தேதி நடைபெற உள்ளது. இது சம்பந்தமான மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் போத்தனூர் ரோட்டில் உள்ள வசந்தம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது 10 மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் உமர்,மமக மாநில செயலாளர் சாகுல் அமீத். மமக மாவட்டத் தலைவர் சர்புதீன்.மமக மாவட்ட செயலாளர் இப்ராகிம்.தமுமுக மாவட்ட செயலாளர் முச்சிப் ரஹ்மான்.மமக மாவட்ட பொருளாளர் சிராஜுதீன் மமக மாவட்டத் துணைச் செயலாளர்கள் குனிசை ஷாஜகான். ஆசிக் அகமதுஅபு பைசல் ரகுமான், நூர்தீன் அசாருதீன், அப்பாஸ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் கலந்து கொண்டார்கள்.

கோவையில் தேசிய புலனாய் முகமை NIA அமைப்பு அப்பாவை இஸ்லாமியர்களை கைது செய்து வருவதை வன்மையாக கண்டிக்கிறது.

மதுரையில் ஜூலை6 தேதி நடைபெற உள்ள பேரணி மாநாடு நடைபெற உள்ளது இதில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து பயணிக்கும் இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்கள்.