• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குணா இரங்கல்!

ByKalamegam Viswanathan

Dec 30, 2023

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பு.
நல்லதொரு மனிதர் கேப்டன் விஜயகாந்த். மக்களின் கஷ்டத்தை புரிந்த ஒரு உத்தம தலைவர். மக்களை கஷ்டபட்டு விட கூடாது என்பதற்காக நான் ஆட்சிக்கு வந்ததும் ரேஷன் பொருட்களையே வீடு தேடி கொடுக்கும் திட்டத்தை கொண்டு வருவேன் என்று சொன்ன தலைவர் கேப்டன் விஜயகாந்த். பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். கேப்டன் விஜயகாந்த் பசியின்றி மக்கள் வாழ வயிரார உணவு அளித்த உத்தம தலைவர் கேப்டன் விஜயகாந்த். கேப்டனை பற்றி ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி மக்களை திசை திருப்பிய ஊடகங்களே உங்களால் தமிழக மக்கள் நல்லதொரு தலைவரை இழந்து நிக்கின்றது. அரசியலுக்கு அப்பார்பட்டு நல்லதொரு மனிதராக வாழ்ந்து வந்தார். கள்ளங்கவடம் இல்லாத துணிச்சலான தலைவர். அவருக்கு ஏன் இப்படி ஒரு மரணத்தை இறைவன் கொடுத்தார். ஊழல்வாதிகளுக்கு சிலை வைக்க துடிக்கும் அரசியல் கட்சியினர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஏன் சிலை வைக்க கூடாது. தமிழக மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்து இருக்கிறார் என்பது கேப்டனின் இறப்பிற்கு பின்பாவது ஊடகத்தினர் தெரிந்து இருப்பார்கள். MGR, Jayalaitha, kalaigar இறப்பிற்கு வந்த மக்கள் கூட்டத்தை விட கேப்டனின் இறப்பிற்கு சென்னையே மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தமிழக மக்கள் பயன்படுத்தக்கூடிய கைபேசிகளில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை கேப்டனின் இரங்கல் செய்திகளை தான் பதிவிட்டுள்ளனர். நல்ல குணம் படைத்த கேப்டனின் துரோகிகளுக்கு இறைவனால் விரைவில் சரியான பாடம் புகட்டப்படுவார்கள். பச்சை துரோகி நடிகர் வடிவேலுவை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நடிகர் வடிவேல் நடித்துள்ள படங்களை தமிழக மக்கள் தவிர்க்க வேண்டும். கேப்டன் விஜயகாந்த் அவர்களே துரோகி வடிவேல்லை மன்னிக்கவில்லை. கேப்டனின் ஆன்மா சாந்தி அடைய அனைத்து நல்ல உள்ளங்களும் இறைவனை வேண்டிக்கொள்வோம். கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு இந்து மக்கள் கட்சி ஆன்மீக அணி மாநில செயலாளர் குணா ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்து கொள்கிறேன்.