• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

Byஜெ.துரை

Feb 8, 2023

பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது…


தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என் ஆர் தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவின் கரு நாகராஜன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்..மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தும்விதமாக அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசா மீது திமுக கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,காமராஜரை அவதூறாக பேசிய ஆ ராசா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது…மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு நாடார் அமைப்புகள், வணிகர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை சார்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆ ராசாவை கண்டித்தும் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் …