வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கடந்த மாதம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் வாங்காமல் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன அதில் வார்டுக்கு ஒரு நியாய விலை கடை இயங்கி வருகின்றது. இந்த கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயில் வரும் ஐந்தாம் தேதி வரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை வாங்காதவர்கள் வாங்கி பயன்பெறும் வகையில் அறிவிப்புகள் ரேஷன் கடைகளில் வெளியிடப்பட்டுள்ளதா? பொதுமக்களுக்கு முறையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதா? நியாய விலைக் கடைகளில் பருப்பு, பாமாயில், இருப்பு உள்ளதா? எவ்வளவு பேருக்கு கடந்த மாதத்திற்கான பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அனைத்து கடைகளிலும், ஐந்தாம் தேதி வரை பாமாயில் பருப்பு வழங்கப்படும் என அறிவிப்பு பலகை எழுதி வைக்கும்படி கடை பணியாளர்களை கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் குறுஞ்செய்திகள் மூலம் தகவல் அனுப்பி பொருள்களை பெற்றுக் கொள்ள ரேஷன் கடை பணியாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ரேஷன் கடை பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், மூன்றாவது வார்டு கைலாசம்பாளையம் பகுதி நியாய விலை கடைக்கு ஆய்வுக்கு சென்ற போது அந்த கடையின் பின்புறம் ரூ 12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 20 அரைகள் கொண்ட ஒருங்கிணைந்த சுகாதார கழிப்பிட வளாகத்தின் கட்டுமான பணிகளை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, பார்வையிட்டார். உடன் மூன்றாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செல்வி ராஜவேல், நகரத் துணைச் செயலாளர் ராஜவேல் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் என பலரும் உடன் இருந்தனர்.