• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத டாஸ்மாக் கலெக்டரிடம் புகார்..,

ByS.Ariyanayagam

May 11, 2026

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை 24 மணி நேரமும் மாவட்டம் முழுவதும் மதுபான விற்பனை டாஸ்மார்க் மதுபான கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதாகவும் டாஸ்மார்க் இல்லாமல் சந்து சந்துக்கு தொடர்ந்து ஊருக்கு 10 இடங்களில் மதுபானம் விற்பனை செய்வதாகவும் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி TVK கட்சியை சேர்ந்த விக்னேஷ். ஞானசேகர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் 24 மணி நேர மதுபான விற்பனை குறித்து புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பட்டிவீரன்பட்டி மற்றும் வத்தலகுண்டு பகுதிகளில் டாஸ்மாக்-ல் பாட்டிலுக்கு MRP- விலையில் இருந்து ரூ.10 அதிகமாக விற்பனை செய்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் டாஸ்மார்க் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்வதாகவும் ஆட்சி மாறினாலும் தற்போது வரை காட்சி மாறவில்லை காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுபானம் விற்பனை செய்பவர்கள் கேள்வி கேட்டால் மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.