திண்டுக்கல் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை கிராமம் பில்லமநாயக்கன்பட்டி அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு திடல் நிலத்தில் 80 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியுள்ளனர்.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு சார்பாக கிராம நிர்வாக அலுவலர், அரசு நில அளவையர் அளவீடு செய்து அதில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என கூறியும், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆக்கிரமிப்பு நடக்கவில்லை என்கிறார். எனவே பெருமாள் கோவில் நிலத்தை மீட்டு கோவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், மேலும் கோவிலுக்கு சொந்தமான சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை முறையாக ஏலம் விட்டு அந்த வருவாயை கோவிலுக்கு செலுத்த வேண்டும்,
சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் நிலத்தில் விவசாயம் செய்து வருவாய் ஈட்டியவர்களுக்கு அபராதம் விதித்து உரிய தொகையை வசூலிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)