• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காணாமல் போன தனது மகளை கண்டுபிடிக்க புகார்..,

Byஜெ. அபு

Aug 11, 2025

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி நேசன் கலாசாலை தெருவில் வசிப்பவர்கள் ரமேஷ் – பிரியா தம்பதியினர் இவர்களின் மகள் விசித்ரா (16) இவர் கடந்த மூன்றாம் தேதி அன்று காணவில்லை எனக் கூறி ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் விசித்ராவின் தாயார் பிரியா புகார் மனு அளித்துள்ளார்.

காவல்துறையினருக்கு புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை எனக் கூறி விசித்ராவின் தாயார் தனது உறவினர்களுடன் சுருளி அருவி தேனி மாநில நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அறிந்த காவல்துறையினர் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை செய்தனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கிறோம் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் ஈடுபட்டவர்கள் கவைந்து சென்றனர்.