தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவருக்கும் கம்பம் பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணிற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்திக் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் சங்கீதா சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து வழக்கு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இருவரும் சேர்ந்து வாழ்ந்த வந்த போது கார்த்திக் தனது மனைவி பெயருடன் இணைத்து சென்னையில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த வீட்டினை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என சங்கீதா மற்றும் அவரது சகோதரர் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக புகார் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் சங்கீதா தனது முதல் கணவர் கார்த்திக்கிற்கு தெரியாமல் தேனியை சேர்ந்த கௌதம் என்ற நபருடன் கடந்த ஆண்டு திண்டுக்கலில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார.

தனக்கு முறையாக விவாகரத்துக் கொடுக்காமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தன் பெயரில் உள்ள வீட்டை அபகரிக்கும் முயற்சியோடு சங்கீதா அவரது சகோதரர் மற்றும் அவரது இரண்டாவது கணவர் கௌதம் ஆகியோர் சேர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து 3 நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்திக் கோரிக்கை வைத்துள்ளார்.