• Fri. Apr 26th, 2024

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகருடன் வீடியோ கால் பேசிய தளபதி விஜய்…

Byகாயத்ரி

May 11, 2022

பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படத்தை வம்சி இயக்குகிறார். விஜயின் 66 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கின்றார். இந்தப் படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இதில் யோகி பாபு, ஷ்யாம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயசுதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகின்றது.

இந்தப் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் வீடியோ கால் பேசும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகர் விஜய் தனது ரசிகர் ஒருவரின் குடும்பத்தினருடன் பேசியுள்ளார். இதனை சம்பந்தப்பட்ட அந்த ரசிகர் புகைப்படமாக தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க, அது சில நிமிடங்களில் இணையதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *