• Thu. Mar 28th, 2024

நான் ஆடிய ஸ்டெப்பை பார்த்து இன்ஸ்ஃபையர் ஆன தளபதி- ரவிச்சந்திரன் அஸ்வின்

Byகாயத்ரி

Dec 28, 2021

மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு தான் ஆடிய ஸ்டெப்பை பார்த்து இன்ஸ்ஃபையர் ஆகித்தான் தளபதி விஜயே டான்ஸ் ஆடி இருப்பார் என இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசிய கலகலப்பான வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டி நடைபெற்று வரும் செஞ்சூரியன் மைதானத்தில் திங்கட்கிழமை காலை முதலே மழை வெளுத்து வாங்கியது. இதனால் இரண்டாவது நாள் ஆட்டம் முழுவதுமாக ஆட முடியாமல் போனது. இதனால் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது, ரசிகர்களும் மிகவும் அப்செட் ஆனார்கள்.

இந்நிலையில் மழை காரணமாக ஏமாற்றமடைந்தாலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் தற்போதைய அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துள் தாக்கூரும் கலகலப்பாக உரையாடிய வீடியோவை வெளியிட்டுள்ளது.


கலகலப்பான இந்த வீடியோவில் அஸ்வின் தான் சந்தித்த கசப்பான அனுபவங்கள், அதிலிருந்து மீண்டு வந்த விதம் குறித்தும், தனது கிரிக்கெட் பயணம் குறித்தும் ஷர்துலின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அஸ்வினிடம் ஷர்துல், நான் உங்களுடைய நிறைய நடன வீடியோவை பார்த்துள்ளேன் எனவும், அது எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய நடன வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது என கூறினார்.


மேலும் மற்ற வீடியோக்கள் எதுவும் உங்களுடைய அளவிற்கு சிறப்பானதாக இல்லை, நீங்கள் இதற்காக எதுவும் பயிற்சி எடுக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு மாஸ்டர் வாத்தி கம்மிங் ஸ்டெப்பை போட்டுக் கொண்டே ஜாலியான ரவிச்சந்திரன் அஷ்வின்,”என்னுடைய வாத்தி கம்மிங் வீடியோ தான் அந்த அளவிற்கு வேகமாக வைரலானது, அதில் அந்த ஒரு ஸ்டெப் தான் மிகவும் ஹிட் அடித்தது, ஒருவேளை நடிகர் விஜய் என்னை பார்த்து தான் இன்ஸ்பையராகி இந்த ஸ்டெப்பை போட்டிருப்பார் என்று நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *