• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்?

தமிழ் சினிமாவில் மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகை திரிஷா. கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றவர், அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கமல், அஜித், விஜய், விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த த்ரிஷா, சமீக காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வந்தார். இது தவிர இவர் நடிப்பில் தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் த்ரிஷாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு கிளம்பியுள்ளது. சமீப காலமாக த்ரிஷா எந்த படத்திலும் கமிட்டாகவில்லையாம், எவ்வளவு நல்ல கதையோடு வந்தாலும் ஓ.கே. சொல்லாமல் மெளனம் காக்கிறாராம். இதனால் தான் ஒருவேளை த்ரிஷாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் த்ரிஷா தனக்கான நபரை கண்டுபிடித்துவிட்டாரா , அவர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிஷாவிற்கும் பிரபல தயாரிப்பாளருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்தம் வரை சென்ற திருமணம் திடீரென நின்றது குறிப்பிடத்தக்கது.