வருகிற ஜூலை 30ஆம் தேதி ஆரணியில் ஸ்ரீனிவாசா திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருகோவிலில், நாளை மறுநாள் ஆரணியில் நடைபெற உள்ள திருக்கல்யாணம் உற்சவம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி, ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சேகர் ரெட்டி..,
சென்னை தீவுத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது என்றார். மேலும் வேலூர், ஆரணியில் ஏ.சி.எஸ் கல்வி குழுமம் சார்பில் ரூ.22 கோடி செலவில் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ள நிலையில், வரும் 30 தேதி மாலை, ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளதாக கூறினார். இந்நிலையில் திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம், பஸ் வசதி, தங்குமிடம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கூறிய சேகர் ரெட்டி, 29ம் தேதியன்று திருமலையில் இருந்து மேள தாளம் முழங்க பெருமாள் எழுந்தருள உள்ளதாக கூறினார். அதேபோல் 20 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய ஏ.சி.சண்முகம்..,
திருமலையில் உள்ள நிர்வாகிகள், தமிழகத்தில் உள்ள அறங்காவலர்கள் ஆகியோருக்கு இவ்விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.