தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரங்கம்மா பாட்டி. இவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த விவசாயி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதுவரை 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் வறுமையால் அவதிப்பட்டார். மேலும் அவர் மெரினா பீச்சில் கரிச்சீப் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. கடைசி காலத்தில் எந்த ஆதரவும் இல்லாமல் தவித்து வந்த அவர் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்த ரங்கம்மா பாட்டி தற்போது காலமாகியுள்ளார். பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.