• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வந்தாங்க. .பார்த்தாங்க.. போயிட்டாங்க : அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு சென்ற பின்பு இதுவரை மத்திய அரசின் நிதி வழங்கவில்லை எனவும் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நல்ல உதவி வழங்கப்பட்டது. அவற்றை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார். அதன் பின்பு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்படும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை செப்பனிடுவதற்கு தமிழக அரசு 95 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

இதன்மூலம் 74 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் செப்பனிடப்படும் எனவும் காவல்கிணறு – களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் காணப்படும் பள்ளங்களை சீர் செய்வதற்கு 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் வந்து பார்த்து சென்ற பின்னரும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் இருந்து வசூலிக்கப்படும் பிஎஸ்டி வரியை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கவேண்டும் கனவு மாநில அரசுகளுக்கு பல்வேறு பணிகளுக்கு நிதி தேவைப்படுவதால் மத்திய அரசு அளிக்கும் நிதி உதவியாக இருக்கும் எனவும் கூறினார் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் மத்திய அரசு தான் இலங்கை அரசுடன் பேச வேண்டுமெனவும் கூறினார்.