• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

” கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

ByJeisriRam

Apr 29, 2024

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ” கல்லூரி கனவு; உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலின் படி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செலின் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது .

மாவட்ட கல்வி அலுவலர் முத்துலட்சுமி, இளஞ்சிறார் நீதிக்குழும உறுப்பினர் பாண்டியராஜா, விழிப்புணர்வு கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் மலைச்சாமி, ஷீலா மார்க்ரேட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணயர்விகள் அடைய வேண்டிய இலக்கு குறித்து பேசினர்.

மக்கள் மறுமலர்ச்சி தடம் நர்ச்சர் பயிற்சி குழுவினர்,அர்னால்டு இரமச்சந்திரன் மற்றும் ஐ.சி.பி.எஸ் திறன் மேம்பாட்டு நிறுவனம் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்கள் உயர் கல்வி பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் தமிழ்நாடு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் பேசினார்.

பணிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 227 மாணவ, மாணவியர்கள் அவர்களின் பெற்றோர்கள் விடுதி காப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களையும் கேட்டறிந்தனர்.

மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள வழிகாட்டு முதல் நாள் நிகழ்ச்சி இன்றும் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் இரண்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் சேவியர் பால்சாமி நன்றி கூறினார்.