• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர்

Byகாயத்ரி

Jan 7, 2022

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பூவரசன்குப்பம், ராம்பாக்கம் ஆகிய கிராமங்களில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சிறுவந்தாடு ஊராட்சியில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்புக் கட்டுப்பாட்டு அறையையும் ஆய்வு செய்தார்.

பிறகு அந்த கிராமம் வழியாக மாவட்ட ஆட்சியர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கால்களை இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கைளால் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.இதைப் பார்த்த ஆட்சியர் உடனே காரை நிறுத்தி அவரிடம் சென்று விசாரித்தார். அப்போது அந்தப் பெண் தனது பெயர் திலகம் என்றும், மூன்று சக்கர சைக்கிள் கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் கூறினார்.உடனே மாவட்ட ஆட்சியர் தொலைபேசியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொண்டு வாகனத்திற்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

ஆட்சியர் உத்தரவிட்ட ஒரு மணி நேரத்திலேயே மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டதால் திலகவதி நெகிழ்ச்சியடைந்தார். மாவட்ட ஆட்சியருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.