• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அரசு மாணவர்கள் விடுதியில் ஆட்சியர் சங்கீதா திடீர் ஆய்வு

ByP.Thangapandi

Dec 3, 2024

உசிலம்பட்டி அரசு மாணவர்கள் விடுதியில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா திடீர் ஆய்வு மேற்கொண்டார், தொடர்ந்து உசிலம்பட்டி பகுதியில் உள்ள கொசு தொல்லையை கட்டுபடுத்த நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள அரசு கள்ளர் மாணவர் விடுதியில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் விடுதி காப்பாளர் ஜெயச்சந்திரனிடம் சமையல் செய்வது குறித்தும், மாணவர்கள் பதிவேடு குறித்து விசாரணை செய்தார்.

இந்த விசாரணையின் போது விடுதி வளாகத்தில் மாவட்ட ஆட்சியரை சூழ்ந்த கொசுக்களை கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் ஏன் இவ்வளவு கொசுத் தொல்லை என கேட்டுக் கொண்டதுடன், தொடர்ச்சியாக உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து அங்கிருந்த அலுவலர்களிடம் நகராட்சி அலுவலகத்திலும் கொசு தொல்லையாக உள்ளது. உடனடியாக உசிலம்பட்டி பகுதியில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு நகராட்சி அலுவலர்களிடம் உத்தரவிட்டுச் சென்றார்.

ஆய்விற்கு வந்த மாவட்ட ஆட்சியரே கொசு தொல்லை தாங்க முடியாமல் கொசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, உத்தரவிட்டு சென்றது, உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.