• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழக கவர்னர்சந்திப்பு:புத்தகம் வழங்கிய கலெக்டர் ,மாவட்ட வருவாய் அலுவலர்

ByA.Tamilselvan

Jun 18, 2022

தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களில் 2 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (சனிக்கிழமை) காலை தூத்துக்குடி வருகைபுரிந்தார்.. கவர்னர் வருகையை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்
தூத்துக்குடியில் நடைபெறும் வ.உ.சியின் 150-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார். . இந்த விழாவை முடித்துக் கொண்டு அவர் நெல்லை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.


திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்த கவனர் ஆர்.என்.ரவியை ஆட்சியர் வி .விஷ்ணு IAS வரவேற்றார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர்(DRO) ஜெயஸ்ரீ அழகுராஜா, தமிழக ஆளுநருக்கு Gandhi,The years that Change the World-1914 to 1948 எனும் புத்தகத்தினை பரிசளித்தார் . இந்நிகழ்வில் கலெக்டர் அலுவல ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.