மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை ஆய்வு செய்தார், தொடர்ந்து நக்கலபட்டியில் அரசு பள்ளியில் கழிப்பறை சுகாதாரமற்று காணப்படுவதோடு, கட்டிடமும் சிதிலமடைந்துள்ளதை கண்டு விரைந்து இடித்துவிட்டு புதிய கழிப்பறை கட்ட உத்தரவிட்டார்.

மேலும் மாலைப்பட்டியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் செட்டியபட்டியில் கரும்பு பயிருக்கு அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசன முறை, சந்தைப்பட்டியில் இங்கிலாந்து முறைப்படி சாகுபடி செய்யப்பட்டுள்ள தர்ப்பூணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாயம் எந்த அளவிற்கு பயன் அளிக்கிறது.
அதன் மூலம் மானியங்கள் வழங்கப்படுகிறதா என விவசாயிகளிடமும் அவர்களின் குறைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் கேட்டறிந்தார்.,