79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டைப சேமப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடியேற்றி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மூவர்ண பலூனையும் அமைதியை வெளிப்படுத்தும் புறாக்களை பறக்கவிட்டார்.

மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்க உள்ளார். மேலும் இதில் பல்வேறு துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு 22 லட்சத்து 93 ஆயிரத்து 338 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறந்த முறையில் பணியாற்றிய பல்வேறு துறையை சேர்ந்த 321 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்








