• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

போதை பொருள் மற்றும் குழந்தைகள் பாலியல் தடுக்கும் வண்ணமாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சைக்கிள் பேரணி

BySeenu

Aug 3, 2024

போதை பொருள் மற்றும் குழந்தைகள் பாலியல் தடுக்கும் வண்ணமாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 78 கி.மீ சைக்கிள் பேரணி
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பாதித்து வருவதாலும் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாலியல் கொடுமையை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 78 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணியாக சென்றார்.

இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி தொடங்கியது. சைக்கிள் பேரணியில் 16 வயது முதல் பெரியவர் வரை பேரணியில் கலந்து கொண்டனர்.

சைக்கிள் பேரணியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் காவல் அனைவரும் பொதுமக்களுடன் சேர்ந்து சைக்கிள் பேரணியில் பயணம் செய்தனர். பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணி காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து தொடங்கி டவுன்ஹால், செட்டிவீதி, பேரூர், பச்சாபாளையம், ஆலந்துறை, மாதம்பட்டி, சாடி வயல், ஈசா யோகா சென்று அடையும்.அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக வந்து இறுதியாக அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறைவடையும். சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மைதானத்தில் உறுதிமொழி எடுக்கின்றனர்.