• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி

BySeenu

Dec 15, 2024

கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி – துவக்கி வைத்த முன்னாள் டிஜிபி,மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர்..

புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினார்.

கோவையில் ஆண்டு தோறும் மிகப்பெரிய மாரத்தான் போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கோயம்புத்தூர் மாரத்தான் 2024 எனும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் ,மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்து போட்டியில் பங்கேற்று ஓடினர்.

கோவை வ.உ.சி மைதனாம் அருகே துவங்கிய இதில் 21 கிலோ மீட்டர்,10,கிலோ மீட்டர், 5கிலோ மீட்டர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ரிலே ஓட்டம் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 21ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாரத்தான் நிகழ்ச்சியில்
வெற்றி பெறும் ஆண்கள் பெண்களுக்கென தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படுகின்றன.