சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி மாவட்ட முதன்மை வங்கியாக தேர்வு அமைச்சர் மூர்த்தி கேடயம் வழங்கினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி மதுரை மாவட்ட முதல் கூட்டுறவு வங்கியாக தேர்வு செய்யப்பட்டது. மதுரையில் நடந்தது 71 வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடந்த விழாவில் வணிகவரி துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இதற்கான கேடயத்தை வழங்கினார். இதை பொதுமேலாளர் வீரணன் பெற்றுக் கொண்டார்.அருகில் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வங்கி மேலாண்மை இயக்குனர் தங்கநாககுரு மற்றும் அலுவலர்கள் உள்ளனர். அலுவலர்கள் ஜானகி, கீர்த்தனா, நிவேதா, வளர்மதி, தமிழ்செல்வி, தீபா, முத்துவிஜயன், ராமசாமி,முருகன் உடன் இருந்தனர்.