• Mon. Apr 29th, 2024

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 8 அம்ச கோரிக்கை.., மதுரை மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம்…

Byகுமார்

Oct 10, 2023

தமிழ்நாடு மாநில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 8அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை நட்டத்திற்கு கொண்டு செல்லும் பல்நோக்கு சேவை மையம் MSC{AIF திட்டத்தின்கீழ் தேவையற்ற வோளண் உபகரணங்கள். டிராக்டர், லாரி, பிக்கப் வேன், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை வாங்க கட்டாயப்படுத்தி அமுல்படுத்துவதை கைவிடுதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகயை நிறைவேற்ற கோரி மதுரை மண்டல அளவில் மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 700 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கப்பணியாளர்கள், 1000 நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் ஓவ்யு பெற்ற பணியாளர்கள் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கமராஜ்பாண்டியன் தலைமை வகிந்தார். ஓய்வுபெற்றோர் சங்க மாநில துணை தலைவர் உதயகுமார் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் ஆசிரியதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கோரிக்கைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் கூறியது.

MSCIAIF திட்டத்தை கட்டாயப்படுத்தி அழுபைடுத்துவதை கைவிடப்படவேண்டும்.

நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய குழுவின் அறிக்கையினை விரைவில் பெற்று ஊதிய உயர்வு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.

சங்க செயலாளர்களின் பொது பணி நிலைத்திறன் அமைப்பின் கீழ் உள்ள இடர்பாடுகளை நீக்கும் வரையில் செயலாளர்களின் பணியிட மாறுதல் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

சங்கங்களின் தவணை தவறிய நகைகளை ஏலமிட்ட வகைளில் ஏற்பட்ட இழப்பீட்டு தொகையினை நட்டக்கணக்கிற்கு கொண்டு செல்லும் வகையில் நிபந்தனைகளை தளர்த்தி புதிய உத்திரவு பிறப்பிக்கப்பட வேண்டும். சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் திரப்பிட வேண்டும்.

பயிர்க்கடன் தள்ளுபடியில் விதிமீறல் என கூறி செயலாளர்களின் பணி ஓய்வு காலத்தில் ஓய்வு கால நிதிப்பயன்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். 25.02.2001க்குப் பின்னர் பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.

பணியாளருக்கு பதவி உயர்வு வழங்குவதில் உள்ள நடைமுறை பிரச்சினைகளை நீக்கி அனைவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் 12.10.2023 அன்று மாநிலம் முழுவதும் சுமார் 40000 பணியாளர்கள் 7 மண்டலங்களில் இருந்து கலந்து கொண்டு சிறை நிரப்பும் சாலை மறியல் போராட்டம் நடைபெற இருக்கிறது எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *