• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட, சி.எம்.துரைஆனந்த் விருப்ப மனுவை அண்ணா அறிவாலயத்தில் தாக்கல்

ByG.Suresh

Mar 6, 2024

சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட நகர் கழக செயலாளரும், நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் விருப்ப மனுவை அண்ணா அறிவாலயத்தில் தாக்கல் செய்தார்.

ஒவ்வொரு திமுக தொண்டனின் நாடித்துடிப்பாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னையில் உள்ள தலைமை கழகமாம் அண்ணா அறிவாலயத்தில் இன்று சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்பமனுவை நகர் கழக செயலாளரும், நகர்மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் தலைமை கழக பொறுப்பாளர்களிடம் வழங்கினார் . இவர்களுடன் NRI Wing அணி மாவட்ட தலைவர் கேப்டன் R.V.சரவணன்,நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன்,விஜயகுமார், செந்தில்வேல் பாண்டியன்,ராம்தாஸ், ஆறு.சரவணன், மதியழகன், கீதா கார்த்திகேகன்,நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆ.ஹரிஹரன்,சென்னை எழும்பூர் திமுக பிரவீன்குமார் சோபன்ராஜ்,டாமின் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.