• Fri. Jan 17th, 2025

காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நகர தலைவர் அரண்மனை வாசல் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ByG.Suresh

Mar 5, 2024

சிவகங்கை மாவட்டத்தில் காா்த்தி சிதம்பரம் எம்.பி ஆதரவாளா்கள்
ஆதரவாளா்களான மானாமதுரை- புருஷோத்தமன், திருப்பத்தூா்- சீனிவாசன், சிவகங்கை- விஜயகுமாா், தேவகோட்டை- சஞ்சய், புதுவயல் முத்துமீரா, கோட்டையூா்- பழனியப்பன் ஆகியோரை நகரத் தலைவராக மாநிலத் தலைவா் செல்வப் பெருந்தகை 6 பேருக்கு ஒரே நேரத்தில் நகரத் தலைவா் பதவி கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நிலையில் இன்று கோகுலே ஹால் தெருவில் உள்ள காங்கிரஸ் கட்சிஅலுவலகத்தில் சிவகங்கை காங்கிரஸ் நகர தலைவர் விஜயகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் முதல் கமிட்டி கூட்டம் நடைபெற்றது நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நகர தலைவர் விஜயகுமார் தலைமையில்
காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக வந்து அரண்மனை வாசல் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ்வட்டாரதலைவர் மதியழகன்,சிதம்பரம்,வெள்ளைச்சாமி, மாவட்ட துணை தலைவர் உடையார்,மோகன்ராஜ் ,மாநில மகளிர் காங்கிரஸ் துணை தலைவி ஸ்ரீவித்யாகணபதி மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையது இப்ராஹீம், மகேஷ்குமார் MC, MC,ரெட்ரோஸ் பழனிச்சாமி, செங்குட்டுவன், ஜார்ஜ், வட்டார செயலாளர் காளிமுத்து,வட்டார துணைதலைவர் ஜெகன் கருப்பையா, சீனிவாசன், லெட்சுமணன்,விக்னேஸ்வரன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.