• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு படையெடுக்கும் பொது மக்கள்

Byமதி

Nov 6, 2021

பெட்ரோல் விலை குறைந்ததால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வாகன ஓட்டிகள் படையெடுத்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் குறைக்கப்பட்டது. கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.55-க்கும், டீசல் 93.54-க்கும் விற்பனையானது.

அதேவேளை கடலூரை ஓட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் நேற்று ரூ.94.99-க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடலூரில் உள்ள வாகன ஓட்டிகள் புதுச்சேரிக்கு படையெடுத்தனர். அவர்கள் தங்கள் வாகனங்களில் உள்ள பெட்ரோல் டேங்குகளில் முழு கொள்ளளவையும் நிரப்பினர். இதனால் புதுச்சேரி எல்லை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.