
மும்பை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி, ஜாமினில் வெளியே வந்துள்ள ஆர்யன் கான், மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த மாதம் சென்ற சொகுசு கப்பலில், என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி, கப்பலில் இருந்த பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்களையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
மும்பையில் உள்ள ஆர்த்தர் சாலை சிறையில் ஆர்யன் கான் அடைக்கப்பட்டார். இதையடுத்து 22 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யன் கான், ஜாமின் பெற்று சமீபத்தில் வெளியே வந்தார். அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை மும்பை உயர் நீதிமன்றம் அப்போது விதித்தது. இந் நிலையில் அந்த நிபந்தனையின்படி, மும்பையில் உள்ள என்.சி.பி., அலுவலகத்தில் ஆர்யன் கான் நேரில் ஆஜரானார்.