• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

அரசாணைக்கு புறம்பாக செய்யப்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Byமதி

Nov 25, 2021

விருதுநகர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களிடம் அரசாணைக்கு புறம்பாக முன்பணம் பெறுவது, பெற்ற முன் பணத்திற்கு ரசீது கொடுக்க மறுப்பது மற்றும் Final Approval கேட்டு காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்ப மறுப்பது போன்ற அரசு விதிகளுக்கு புறம்பான நடவடிக்கைகளை செய்து வரும் விருதுநகர் திருவேங்கடம் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், முறைகேடுகளுக்கு துனை போவதுடன் பொறுப்பை தட்டி கழிக்கும் MD இந்தியா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும், காப்பீட்டுத் திட்ட குறைகளை களைய நியமனம் செய்யப்பட்ட யூனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஸ் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்க மறுத்து வருகிறார். கணேஸ் அவர்களின் தவறான அணுகுமுறையால் காப்பீட்டு திட்ட குறைபாடுகள் நீடித்து வருகிறது. அரசு உத்திரவுக்கு மாறாக செயல்படும் கணேஸ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாளை மாலை 5.30 மணிக்கு, யூனைடெட் இந்தியா நிறுவன அலுவலகம் முன்பு விருதுநகரில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் K.லியாகத் அலி மற்றும் மாவட்ட செயலாளர் R.வைரவன் தலைமையில் நடைபெற உள்ளது.