• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்துக்கு எதிரானதல்ல – ஆளுநர் தமிழிசை

Byவிஷா

Mar 12, 2024

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்துக்கு எதிரானது அல்ல என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கான ரயில்வே திட்டங்களை காணொலியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்ததார். அதன் பின்னர் செய்தியாளார்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..,
“குடியுரிமை சட்டம் நாட்டுக்குத் தேவையான சட்டம். யாருடைய குடியுரிமையும் நீக்கப்படவில்லை. குடியுரிமை சேர்க்கப்படவுள்ளது. மதத்துக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. நாட்டின் பாதுகாப்புக்குதான் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், சிலரால் இச்சட்டம் தவறாக முன் நிறுத்தப்படுகிறது. இதை பின்பற்றவே மாட்டோம் என்று சில மாநிலத்தில் கூறுகின்றனர். இதில் மாநில அரசுக்கு பங்கு இல்லை. இது மத்திய அரசின் திட்டம். இது நாட்டின் திட்டம். இதற்கு மாநில அரசுகள் ஆதரவு தரவேண்டும். இது மதத்துக்கு எதிரானதல்ல. மதத்துக்கு எதிராக இருந்தால் பிரதமர், உள்துறை அமைச்சர் முயற்சி செய்வார்களா? இது நாட்டுக்காகதான். அனைவரையும் இணைத்துதான் பிரதமர் மோடி செல்கிறார். இவர்கள்தான் பிரிவினை பேசுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.