திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி அருட்தந்தை ஜான் பிரிட்டோ முன்னிலை வகித்தார்.


பள்ளி முதல்வர் அருட்தந்தை ரூபன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இல்ல அதிபர் அருட்தந்தை ஜூலியஸ் குமார் பங்கேற்றார். கிறிஸ்துமஸ் விழாவில் அருட்தந்தை ஜூலியஸ் குமார் பேசியதாவது: நாம் பிறரிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். உலகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் அன்பு செலுத்தவே இயேசு பிறந்தார். மனித நேயம் உலகில் தலைத்தோங்க வேண்டும். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக பழக வேண்டும். மன்னிப்பு, வரவேற்பு, நன்றி ஆகிய மூன்று வார்த்தைகளை நாம் கூற மறக்க கூடாது. பிறர் தீமை செய்தாலும், அவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும்.


இதைத்தான் இயேசு உலகத்துக்கு உணர்த்தினார். ஜாதி, மதம், ஏழை, பணக்காரர் கடந்து அனைத்து மக்களும் கொண்டாடும் விழாவாக கிறிஸ்துமஸ் விழா உள்ளது. உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், என்றார். துணை முதல்வர் ஞானசீலா நன்றி கூறினார். பள்ளி மாணவ ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.





