• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து அமைதி பேரணி

ByP.Thangapandi

Apr 27, 2025

போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைவை நினைவு கூறும் வகையில், உசிலம்பட்டியில் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.

அகில உலக கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைந்த நிலையில், அவரது உடல் பல்வேறு மரியாதைகள், பொதுமக்கள் அஞ்சலி என துக்கம் அனுசரித்த பின், நேற்று வாடிகன் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைவை நினைவு கூறும் வண்ணம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.சி. திருச்சபை மற்றும் குழந்தை ஏசு ஆலயம் சார்பில் போப்பாண்டவரின் திருஉருவபடத்துடன் உசிலம்பட்டி குழந்தை ஏசு ஆலயத்திலிருந்து உசிலம்பட்டி பேருந்து நிலையம், தேவர் சிலை வழியாக பேரையூர் ரோடு ஆர்.சி. திருச்சபை வரை கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தினர்.

தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்பட்ட பின், மௌன அஞ்சலியும் செலுத்தி அவரது திரு உருவப்படத்திற்கு ஏராளமான கிருத்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.