• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆர்.பி.உதயகுமாரிடம் வாழ்த்து பெற்ற கேபிள் மணி

ByN.Ravi

Mar 28, 2024

அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சோழவந்தான் கேபிள் மணி பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் அவர்களை, நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கவி காசிமாயன் ஆகியோரையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். உடன்,அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் இருந்தனர்.
இது குறித்து, கேபிள் மணி கூறும்போது: கழக பொதுச்செயலாளர் மற்றும்
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து வழங்கி உள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியின் அதிமுக வெற்றி வேட்பாளர் நாராயணசாமி, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சியினருடன் இணைந்து அயராது பாடுபடுவேன் எனக்கு, ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கடுமையாக உழைத்து அதிக வாக்குகளை பெற்று தருவேன் என்று கூறினார். சோழவந்தானில் உள்ள கட்சி அலுவலகத்தில் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணியை சந்தித்த கட்சியினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.