• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் வைகாசி திருவிழா தேரோட்டம்

ByN.Ravi

Jun 25, 2024

மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
சோழவந்தான் மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 10தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெற்று தினசரி வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்துதினசரி கலைநிகழ்ச்சி நடந்தது.
16ஆம் நாள் திருவிழா தேரோட்டம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, அதிகாலை அம்மன் கேடயத்தில் அலங்காரமாகி கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்து சேர்ந்தது.
அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார். காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா, சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், துணைக் கண்காணிப்பாளர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, சப்இன்ஸ்பெக்டர் சேகர், கோவில் செயல் அலுவலர் இளமதி, ஆய்வாளர் ஜெயலட்சுமி, பேரூராட்சி செயல்அலுவலர் செல்வகுமார், தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்யபிரகாஷ், அர்ச்சகர் சண்முகவேல், ஆலய பணியாளர்கள் பூபதி ஆகியோர் வடம் பிடித்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர், இதில் தாசில்தார் மூர்த்தி,
மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேஷ், சோழவந்தான் பாட்டிய மந்தார், கிராம காவல்காரர்கள் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு வெள்ளை வீசினார்கள்.
தேர், அங்கிருந்து புறப்பட்டு கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி, வழியாக தேர் வலம் வந்து புறப்பட்ட இடத்திற்கு தேர் வந்து சேர்ந்தது. தேர் வலம் வருவதற்கு ஆசாரியர்கள் தேர் சக்கரங்களை முறையாக குடில் கட்டை போட்டு வழிநடத்தி வந்தனர்.
வழிநெடுக அம்மனை வரவேற்று பூஜைகள் செய்தனர்.
இதில், முன்னாள் சேர்மன் எம் .கே. முருகேசன், வருவாய் ஆய்வாளர் ,சுகாதாரபணி
ஆய்வாளர் சூரியகுமார், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, செந்தில்வேல், ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேர் வரும் வழி நெடுக மாம்பழம், வாழைப்பழம், நாணயங்கள் சூரை விட்டனர், சிறுவர், சிறுமியர் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வலம் வந்தனர்.
நீர்,மோர்,பானகம் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள். இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், முத்தையா,
முத்து உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பாக சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. மின்சார
வாரிய உதவி இன்ஜினியர் ராஜேஷ் தலைமையில் பணியாளர்கள் தேர் செல்லும் இடங்களில் மின் வயர்களை கழற்றி மீண்டும் இணைப்பு கொடுத்தனர். தேர்திருவிழாவை முன்னிட்டு, வட்டப் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் நண்பர்கள் சார்பாக 11வது ஆண்டாக அன்னதானம் வழங்கும் விழா நடந்தது.
இரவு கோவிலின் முன்பாக உள்ள மேடையில் காவல்துறை பேண்டு வாத்திய இன்னிசை கச்சேரி நடைபெறும். சோழவந்தான் காவல்துறையை குடும்பத்தார்கள் சார்பாக தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காமாட்சிபுரம் சோழவந்தான் பூ வியாபாரிகள் சார்பாக தேர் முழுவதும் வண்ண பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர். இன்று இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும்.