• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் மூன்று மாதம் கொடியேற்றம்

ByKalamegam Viswanathan

Mar 28, 2023

சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் திருக்கோவில் மூன்று மாதம் கொடியேற்றம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை மாவட்டம்.சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா 17 நாட்கள் நடைபெறும் இதனை ஒட்டி மூன்றுமாத கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மே 17ந் தேதி பூச்சொரிதல் விழாவும், மே 22 ந்தேதி திருவிழா கொடியேற்ற நிகழ்வும், மே 30 ந்தேதி பால்குடம், அக்னிசட்டி நிகழ்ச்சியும், மே 31 ந்தேதி பூக்குழி நிகழ்ச்சியும், ஜூன் 6 ந்தேதி தேரோட்டமும், ஜூன் 7 ந்தேதி வைகையாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார் , அலுவலர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.