• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சோழபுரம் அருள்மிகு திருவேட்டை அய்யனார் திருக்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற புரவி எடுப்பு விழா!..

சிவகங்கை மாவட்டம் சோழபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பூர்ண புஷ்கலா தேவியர்கள் சமேத ஶ்ரீ திருவேட்டை அய்யனார் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத உற்சவ பெருவிழா முன்னிட்டு புரவி எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது விழா அய்யனார் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புரவி எடுப்பு விழா நடந்தன முன்னதாக மூலவர் ஸ்ரீ பூர்ணா புஷ்கலா தேவியர்கள் மற்றும் ஸ்ரீ திருவேட்டை அய்யனார் சுவாமிக்கு சந்தன காப்பு சாத்தி வண்ண மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றன சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சோழபுரம் சிவன் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான மண் குதிரைகளுக்கு பூமாலைகள் பட்டு வஸ்திரங்கள் கொண்டு அலங்கரித்து தீப தூப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு கற்பூர தீபாராதனை நடைபெற்றன பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் குதிரைகளை தோளில் சுமந்து கிராமத்தை சுற்றி வலம் வந்து ஸ்ரீ திருவேட்டை அய்யனார் கோவிலை சென்றடைந்தனர் நிறைவாக அய்யனார் கோவிலில் குதிரைகளை வைத்து பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர் புரவி எடுப்பு விழா ஊர்வலமாக சென்ற போது கனமழை பெய்ததால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ திருவேட்டை அய்யனார் சுவாமியை வழிபட்டனர்.