• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செல்ல முத்து மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா..,

ByR. Vijay

Apr 30, 2025

நாகை மாவட்டம் தேவூரில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்ல முத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்ரல் 20 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியடன் தொடங்கியது.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. 30 அடி உயரமுள்ள செடில் மரத்தில் வேண்டுதல் நிறைவேற 1000 த்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செடிலில் மரத்தில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், திரவிய 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து மகா தீபாரதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.