• Wed. Feb 11th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சின்சா அடிக்கும் செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன் கிண்டல்..,

ByS.Ariyanayagam

Feb 11, 2026

திண்டுக்கல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அதிமுக சார்பில் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

பின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக எங்களது கூட்டணியில் உள்ள பாஜக அதிகரித்ததை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைக் கண்டித்து 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திமுக கூட்டணி பலமாக உள்ளது என கூறிய நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி டெல்லி தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த கேள்விக்கு

இதற்கு என்ன பதில் சொல்வது, தலையெழுத்து படி நடக்கட்டும், திமுக கூட்டணி பலம் இல்லாமல் உள்ளது. தோல்வி அடைவது நிச்சயம்.

கூட்டணிக்கை தொகுதிகள் ஒதுக்குவது பற்றி தலைமை அறிவிக்கும் போது தான் தெரியும். அனைத்தும் ரகசியம் தான் வெளியே சொல்ல முடியாது. ஸ்டாலின் உடன் இருப்பவர் இதை பற்றி கூறுவாரா? அனைத்தும் முடிவான பின்பே தெரியும்.

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உட்பட ஊராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் என அனைத்து அலுவலரும் போராட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு

திமுகவின் மோசமான ஆட்சிக்கு போராட்டங்களே அடையாளம்.

ஜாக்டோ ஜியோ பாராட்டு கூட்டங்கள் எல்லாம் நடைபெற்றது ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்தும் ஏமாற்று வேலை, அனைத்தும் பொய் அதற்குரிய விளக்கங்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எங்களுடைய ஆட்சி வந்த உடன் அவர்களுக்கு தேவையான நன்மைகள் செய்வோம்.

போராட்டங்களால் மாணவர்கள் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் உள்ளது.

துப்புரவு பணியாளர்களை கைது செய்தனர் பின் காலை உணவு வழங்கி வருகின்றனர்.

நான்கு வருடம் பத்து மாதத்திற்கு பின்பு அனைத்தும் மந்திரியும் செயல்படுகின்றனர்.

அனைத்தையும் சரி செய்தது போன்று ஏமாற்று வேலையை திமுக செய்து வருகிறது.

உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திமுகவின் திட்டம் குறித்த கேள்விக்கு

இந்த ஆட்சி போக வேண்டும், ஒழிய வேண்டும், அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதை கனவாக கொண்டுள்ளனர்.

அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமையுமா என்ற கேள்விக்கு

நிச்சயம் செய்து உள்ளோம், இனி தாலி கட்ட வேண்டும், குடும்பம் நடத்த வேண்டும், பத்து மாதங்கள் பின்பே குழந்தை பிறக்கும் இப்பவே பெயர் வைக்க சொன்னால் எப்படி முடியும்.

தேசிய ஜனநாயக கூட்டணி இருந்தால் கூட அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தது குறித்த கேள்விக்கு

அதிக பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிச்சாமி நூறுமுறை கூறிவிட்டார். இதையே நாங்களும் கூறுகிறோம். எங்களது கூட்டணி கட்சி பிஜேபி.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதற்கு அதிமுக இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது குறித்த கேள்விக்கு

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் என பெயர் மாற்ற செய்துள்ளனர். அதனுடைய அர்த்தம் இதுதான். ஹிந்தி தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

இதனை பற்றி தெரியாமல் மாங்காய் புளித்தது அது புளித்தது என கூறிக்கொண்டு வருகின்றனர்.

அதற்கு பதில் சொல்லிவிட்டு பல திட்டங்களுக்கு தற்போது மகாத்மா காந்தியின் பெயரை வைத்துள்ளனர்.

மக்களுக்கு புரிய வேண்டும் என்று கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் என ஹிந்தியில் பெயர் வைத்துள்ளனர். தெரியாதவர்கள் ஹிந்தி தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

2014, 2019, 2024 கூட்டணி கட்சியாக இருந்த அதிமுக சரியாக வேலை செய்யவில்லை என புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி கூறியது குறித்த கேள்விக்கு

புதிய தமிழகமா? அவருடைய கருத்தை வைத்து என்ன செய்யப் போகிறோம். 10 வருடத்திற்கு முன்பு நடந்ததை தற்போது கேட்டீர்கள் என்றால், எதைச் சொன்னார் என்று தெரியவில்லை. அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு

நிர்வாக திறமையற்ற மோசமான ஆட்சிக்கு இதுவே சாட்சி. யாராவது இப்படி செய்வார்களா? பிள்ளைகள் தேர்வு எழுதிக் கொண்டு இருக்கும்போது பாதியில் நிறுத்திவிட்டனர் கண்ணீர் மல்க உள்ளனர் என செய்திகள் பார்த்தேன். மோசமான ஆட்சிக்கு இது ஒரு உதாரணம்.

அதிமுக கூட்டணிக்கு வேறு எந்த கட்சிகள் எல்லாம் வரும் என்ற கேள்விக்கு

மீதி உள்ள கட்சிகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் வரும்பொழுது தேர்தலுக்குள் தெரியும்.

தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என்ற கேள்விக்கு

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தேசிய தலைமை தற்போது தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அவர்களின் கோரிக்கை பேச்சுவார்த்தையை மாநில அளவில் முடிக்க முடியவில்லை என்பதால் அவர்கள் எடுத்துள்ளனர். நல்ல விதத்தில் முடியும். அதை அவர்களும் (பா.ஜ.க) நாங்களும் (அதிமுக) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அப்போது அதிமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை பாஜக தான் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்ற கேள்விக்கு

பாஜக எங்களது கூட்டணியில் தான் உள்ளனர்.

சாப்பாட்டில் எத்தனை காய்கறிகள் வைத்தாலும் அது அனைத்தும் எங்களது கூட்டணி தான்.

பாஜக கூப்பிட்டாலும் நாங்கள் கூப்பிட்டாலும் கூட்டணி எங்களுடன் தான்.

சிலர் அதிமுக வை நம்பி வருவார்கள் சிலர் பா.ஜ.க-வை நம்பி வருவார்கள். பலர் அப்படி இருப்பார்கள்.

பாஜக கூட்டினாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக கூட்டணிக்கு தான் வருவார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும், தற்போது பாஜக தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு

அதிமுக தான் கூட்டணி குறித்து பேசி வருகிறது. சில முரண்படாத தலைவர்கள் உள்ளனர். மத்திய அரசாங்கத்தில் பதவி கேட்பார்கள். அதனால் அவர்களை அங்கேயே பேச சொல்லி உள்ளோம். முடிவு அதிமுகவிற்கு சாதகமாக வரும். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிச்சாமி தான் என அமித்ஷா அறிவித்தார்.

அதிமுக அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் திமுக அறிவித்ததை காப்பி அடித்துள்ளனர் என அமைச்சர் சிவசங்கர் கூறியது குறித்த கேள்விக்கு

சென்ற முறை ரூ.1500 அறிவித்தோம் ஆனால் எங்களுக்கு முன்பே திமுக ரூ.1000 அறிவித்தது எடுபட்டுவிட்டது. அதனால் இந்த முறை ரூ. 2000 தருகிறோம் என முந்திக் கொண்டோம். இதற்கு வயிறு எரிந்தால் நாங்கள் என்ன செய்வது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 50% வாக்குகள் திமுகவிற்கு வரும் என அமைச்சர் ஐ பெரியசாமி கூறியது குறித்த கேள்விக்கு

எங்களுக்கு வந்துள்ள கருத்துக்கணிப்பு படி 60% அதிமுக பாஜக கூட்டணிக்கு வந்து விட்டார்கள். 60 பெரியதா 50 பெரியதா என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

த.வெ.க செங்கோட்டையன் பாஜக கூட்டணியில் அதிமுக ஒரு அங்கம் எனக் கூறியது குறித்த கேள்விக்கு

அகில இந்திய கட்சி பாஜக அவர்களே அதிமுக தலைமையில் இருக்கிறோம் என கூறிவிட்டனர். பெரிய மனிதர் அவ்வாறு சொன்னால் நாங்கள் என்ன செய்வது.

உண்மையா பொய்யா என தெரியவில்லை. செய்தியில் வந்தது ஜெகன்மோகன் ரெட்டியிடம் விஜய் பேசியுள்ளார். உன்னுடைய எதிரி திமுக தானே அதை மட்டும் பேசு மத்திய அரசாங்கத்தை ஏன் இழுக்கிறாய் அனுபவத்தில் சொன்னதாக வந்துள்ளது.

வாக்குறுதியில் டாஸ்மாக் குறைக்கப்படும் நிலவருகிறது ஆனால் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு

கஞ்சா, போதை இருப்பது எல்லாம் சட்டப்படி திமுக ஆட்சியில் தான். சின்ன பிள்ளைகளும் கஞ்சா இழுத்து வருகின்றனர். உடன் படிக்கும் பிள்ளைகளை எல்லாம் கேடுத்து குட்டிச்சுவர் ஆக்கி விடுகின்றனர். 13 வயது பிள்ளைகளுக்கு கருத்தடை செய்து வருகின்றனர். கடந்த ஐந்து வருடத்தில் தான் அனைத்து போதை பொருள்களும் வந்துள்ளது. 10 மணியுடன் கடைகள் அனைத்தும் மூட வேண்டும் ஆனால் லைசன்ஸ் இல்லாமல் சந்துகளில் வைத்து விற்கின்றனர். எங்கு பார்த்தாலும் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது இதன் மூலமாகவே திமுக கட்சிக்காரர்கள் பணக்காரர்களாக மாறி உள்ளனர்.

செங்கோட்டையன் விஜய்க்கு புரட்சி தளபதி பட்டம் கொடுத்தது குறித்த கேள்விக்கு

இதை நினைத்து கண்ணீர் விட தான் வேண்டும்.

எங்களுடன் இருந்தா பெரிய மனிதர் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டார்.

எனக்கு செங்கோட்டையன் அவர்களுக்கு என தனியாக தகுதிகள் உள்ளது.

சின்ன சின்ன தாளத்தில் அடிப்பார்கள், ஆனால் அண்ணன் செங்கோட்டையன் தாம்பலத்தில் டம் டம் என்று அடித்து வருகிறார். சர்ச்சில் அடிப்பது போன்று (செய்கையுடன் செய்து காண்பித்தார்) அப்போதும் செங்கோட்டையனை நாலாவது அல்லது ஐந்தாவது இடத்திலேயே உட்கார வைத்துள்ளனர். எங்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

கண்ணீர் வடிக்கின்றோம் எங்களுக்கும் அந்த நிலை வந்து விடக்கூடாது என்று, அவரது நிலை தாழ்ந்து விட்டது.