தேனி மாவட்டம் சின்னமனூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வச்சலா என்பவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு 8 மாதங்களுக்கு முன்பு நகை அடகு வைத்தார். நேற்று சின்னமனூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அடகு வைக்கப்பட்ட நகையை திருப்ப ஒரு லட்சம் ரூபாய் பணம், வட்டியுடன் சேர்ந்து கட்டினார்.
பணம் கட்டிய பிறகு உங்கள் வங்கி கணக்கு லாக் செய்து வைக்கப்பட்டுள்ளது. எனவே நகையை தர முடியாது என திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் சின்னமனூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளிடம், வச்சலா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் இன்று நீங்கள் தேனியில் உள்ள ஸ்டேட் பேங்க் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என வச்சலாவை தேனி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சென்று கேட்டபோது உங்களுடைய குழுவில் கடன் வாங்கி கட்டாமல் இருப்பதால் உங்களுடைய நகையை தர முடியாது என தெரிவித்து விட்டனர். நான் மகளிர் குழுவில் கடன் வாங்கவில்லை.
மேலும் மகளிர் குழுவின் உறுப்பினர்கள் பெயரில் கடன் வாங்கி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது கடன் வாங்கி கட்டாமல் இருப்பது இதுவரை தனக்கு தெரியாது எனவும், நகையை திருப்ப பணம் கட்டிய வச்சலா செய்வதறியாது தவித்து வருகிறார்.




