• Sat. Apr 27th, 2024

இலங்கையில் சீன அமைச்சர் புதிய முதலீடுகள் குறித்து பேச்சு

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ இரண்டு நாள் பயணமாக நம் அண்டை நாடான இலங்கைக்கு வந்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சே உடனான சந்திப்பில் புதிய முதலீடுகள் செய்வது உள்ளிட்டவை குறித்து அவர் பேச்சு நடத்தினார்.விவசாயப் பணிஇலங்கையில் சீனா பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இலங்கையில் விவசாய பணிகளில் ரசாயன உரங்களுக்கு பதிலாக முழுதும்இயற்கை உரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.அதைப் பயன்படுத்தி இயற்கை உரங்களை சீனா ஏற்றுமதி செய்தது. தரமில்லாததால் அது நிராகரிக்கப்பட்டது. ஒப்பந்தத் தொகையை வழங்கவும் இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இதனால் இலங்கைக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இலங்கை மத்திய வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்து சீனா நடவடிக்கை எடுத்தது. பல சுற்று பேச்சுகளுக்கு பின் சமீபத்தில் ஒப்பந்தத் தொகையில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீ இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சேவை அவர் நேற்று சந்தித்து பேசினார்.

நடவடிக்கைஇரு நாடுகளுக்கு இடையேயான துாதரக உறவின் 65வது ஆண்டையொட்டி நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.மகிந்த ராஜபக்சே உடனான சந்திப்பின்போது இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவது புதிய முதலீடுகள் செய்வது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து வாங்க் யீ பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியுறவு அமைச்சர் சி.எல். பெரிஸ் உள்ளிட்டோரையும் அவர் சந்திக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *