• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சீனாவின் பறக்கும் கார் சோதனை ஓட்டம்

ByA.Tamilselvan

Oct 12, 2022

சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை துபாயில் பொதுமக்கள் முன்னிலையில் முதல் முறையாக சோதனை நடத்தியுள்ளது.
சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும் கார். முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றது. ஒரு மூலைக்கு இரண்டு என மொத்தம் நான்கு மூலைகளிலும் எட்டு மின்சார இறக்கைகள் இந்த காரில் இணைக்கப்பட்டு உள்ளன. துபாயில் இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் ஒன்றரை மணிநேரம் நடத்தப்பட்டது. அதில் ஆளில்லாமல் கார் இயக்கப்பட்டது அடுத்த தலைமுறைக்கான பறக்கும் காருக்கான முக்கிய அடித்தளம் ஆக இந்த சோதனை அமையும் என அந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.இந்த கார் விரைவில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.