• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு பேருந்துகளில் குழந்தைகளுக்கு கட்டணம் தேவையில்லை..!

Byவிஷா

May 24, 2023

அரசு பேருந்துகளில் 5வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இயங்கும் நகர பேருந்துகளில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டடம் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக மூன்று வயது வரை இலவசம் என இருந்த நிலையில் தற்போது ஐந்து வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 3 முதல் 12 வயது வரை அரை டிக்கெட் என இருந்து வந்த நிலையில் தற்போது ஐந்து முதல் 12 வயது வரை அரை டிக்கெட் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்து வயது வரை கட்டணம் தேவையில்லை என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.