மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மாடக்குளம் அமைந்துள்ள ஜே ஜே நகர் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிறிய அளவிலான இரண்டு விநாயகர் சிலையை அதில் வைத்து அட்டைப் பெட்டிகளை வைத்து பல்லாக்கு போல் தயார் செய்து ஊர்வலமாக அப்ப பகுதி முழுவதும் பலம் வந்தனர்.

ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விநாயகர் அருள் பாலிக்க வேண்டும் என எண்ணத்தில் நாங்கள் இதை செய்தோம் எனவும் ஒவ்வொரு வீட்டு வாசலில் நின்று தீபாரதனை காட்டி அனைவரும் வழிபடும்படி ஏற்பாடுகள் செய்து இருந்தனர். பின் அந்த சிறுவர்களிடம் கேட்ட பொழுது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபோது இல்லை அண்ணா இன்று விநாயகர் சதுர்த்தி அதனால்தான் நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு சொந்தமாகவே ஒரு பல்லாக்கு கொண்டு தயார் செய்து இரண்டு சிறிய அளவினால் விநாயகரை அதில் வைத்து ஊதுபத்தி சூடன் திருநீறு குங்குமம் சந்தனம் ஆகியவை வைத்து எங்கள் தெரு முழுவதும் எடுத்துச் சென்று ஒவ்வொரு வீட்டிற்கும் விநாயகர் அருள் பெற செய்ய வேண்டும்.

எண்ணத்தில் நாங்கள் கொண்டு செல்கிறோம் மூன்று நாட்கள் கழித்து இதை மாடக்குளம் கண்மாயில் கரைத்து விடுவோம் எனவும் தெரிவித்தனர். பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிறிய அளவிலான பல்லாக்கு போன்ற வடிவத்தில் விநாயகரை தூக்கி சென்றது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.