• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஸ்பெயின் நாட்டில் பெய்த ஐஸ்கட்டிமழையில் குழந்தை பலி- வீடியோ

ByA.Tamilselvan

Sep 1, 2022

ஸ்பெயின் நாட்டில் பெய்த ஐஸ்கட்டி மழையால் ஒன்றரைவயது குழந்தை உயிரிழந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில் திடீரென பெய்த ஐஸ்கட்டி மழையால் குழந்தை பலியானது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கேடலான் என்ற நகரில் பெய்த ஐஸ்கட்டி மழையில் கற்களை போன்ற பெரியபெரிய ஐஸ்கட்டிகள் விழுந்துள்ளன. இதனால் பலருக்கும் மண்டை ,கைகள் உடைந்ததாக கூறப்படுகிறது.கடந்த 20 ஆண்டுகளில் ஸ்பெயினில் இப்படி ஒரு மோசமான ஐஸ்கட்டி மழை பெய்ததில்லை என்று அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.