விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமினை சிவகாசி தாசில்தார் லட்சம் தொடங்கி வைத்தார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 310 மனுக்களும், பட்டா மாறுதல் 150 மனுக்களும் கலைஞர் கனவு இல்லம், முதியோர் உதவித்தொகை, விதவை பென்ஷன், உள்பட பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை துறை, உள்பட 34 துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தாயில்பட்டி, மண்குண்டாம்பட்டி, கலைஞர் காலனி, அண்ணாநகர் ,இந்திரா நகர், கோட்டையூர், பசும்பொன்நகர், கட்டணஞ்சேவல், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாமில் மண்டல துணை வட்டாட்சியர் ரேவதி ,சல்வார்பட்டி வருவாய் ஆய்வாளர் மாரீஸ்வரன் ,திமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.
