• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மற்ற மாநில முதல்வர்கள் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள்… தமிழிசை ஆவேச பேட்டி!

ByPrabhu Sekar

Mar 24, 2025

தமிழகத்தை வஞ்சிக்கும் அனைவரையும் அழைத்து நேற்று நடத்திய கூட்டம் தமிழகத்தை வஞ்சிக்கும் கூட்டம். ஏற்கனவே கொலை செய்யப்பட்டவரின் மகன் தானும் கொலை செய்யப்பட போவதாக வீடியோ பதிவு செய்யும் அளவிற்கு தமிழகத்தின் நிலை இருக்கிறது

கேரளா, கர்நாடக முதலமைச்சர்களிடம் காவேரி முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து ஒரு வார்த்தையாவது பேசினார்களா?

சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி..,

திருச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு செல்வதற்காக தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன்..,

மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறோம். அதற்காக திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி செல்கிறேன்.

தமிழகத்தில் நல்லது நடக்க வேண்டும் என்றால் எங்கள் குரல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஏழை குழந்தைகளை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள். வசதி படைத்தவர்களின் குழந்தைகள் ஏற்றம் அடைந்து கொண்டே போக வேண்டும். ஏழை குழந்தைகள் ஏமாற்றம் அடைந்து கொண்டே போக வேண்டும் என்ற கொடூர குணம் தமிழகத்தில் இருக்கிறது.

தொகுதி வரையறை என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. எந்த விதமான சட்டமும் இயற்றப்படவில்லை. அதற்கு இடையில் கூட்டம் நடத்துகிறார்கள். பிரனாய் விஜயன், DK சிவகுமார் போன்றோர் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள். நேற்று நடந்த கூட்டம் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் கூட்டம் அல்ல, வஞ்சிக்கும் கூட்டம்.

முல்லைப்பெரியாறு பிரச்சினையை தீர்க்கட்டும். காவிரி நதிநீர் பிரச்சனையை தீர்க்கட்டும். இவர்களெல்லாம் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள். அவர்களை அழைத்து வைத்து கூட்டத்தை நடத்தி உள்ளார்கள்.

தொகுதி மருவறையறை 25 வருடத்திற்கு இருக்கவே கூடாது என்றால் அது ரொம்ப தவறு. மச்ற மாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. நமது மாநிலத்தை பொருத்தவரை தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என அமித்ஷா தெளிவாக கூறி விட்டார்.

பத்து தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது உங்களுக்காகத்தான். பாராளுமன்றம் உங்களுக்காக அல்ல. பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் உரிமையை மக்களுக்காக பயன்படுத்த மறுக்கிறார்கள். மக்களுக்காக உரிமையை பயன்படுத்துவதற்கு தான் மறு வரையறை எப்படி இருந்தாலும் தமிழகம் பாதிக்கப்படாது என கூறிய பிறகு, பாதிக்கப்படும், பாதிக்கப்படும் எனக் கூறி ஒரு கூட்டம் கூட்டுவது என்றால், தமிழகத்தில் மறுபடி கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. திருநெல்வேலியில் ஏற்கனவே கொலை செய்யப்பட்டவரின் மகன் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என வீடியோ பதிவிடுகிறார்.

தமிழக மக்கள் தனது குறைகளை வீடியோவில் பதிவு செய்து, ஒளிப்பதிவு செய்த பிறகு கொலை செய்யப்படும் நிலை ஏற்படுகிறது. என்ன நடந்து கொண்டிருக்கிறது தமிழகத்தில்? நேற்று நடந்த கூட்டம் தமிழகத்திற்கு நன்மை சேர்க்கின்ற கூட்டம் அல்ல. தமிழகத்தை வஞ்சிக்கின்ற அனைவரையும் அழைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். தமிழக விவசாயிகள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். இருக்கும் பிரச்சனையை விட்டுவிட்டு இல்லாத பிரச்சனைக்கு கூட்டம் நடத்துகிறார்கள். இருக்கின்ற காவிரி பிரச்சனையை பற்றி ஏதாவது பேசினீர்களா? முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து பிராணாயி விஜயனிடம் ஏதாவது கேட்டார்களா? கேட்கப்பட்டதா?

DKசிவகுமார் பேசும்பொழுது, அண்ணாமலை மாநிலத்திற்கு சாதகமாக இல்லை, கட்சிக்கு சாதகமாக இருக்கிறார் என கூறுகிறார். நாங்கள் மாநிலத்திற்கு சாதகமாக இருப்பதால் தான் நீங்கள் அனைவரும் ஒரே பக்கமாக இருக்கிறீர்கள். தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்ற பரிதவிப்பில் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மாநில மக்களோடு நிற்கிறோம். அதனால் தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

இஸ்லாமியர் பண்டிகையில் குர்பானி கொடுக்க பல ஆடு பலியிடப்படும். தேர்தல் காலத்தில் ஒரு ஆடு பலி கொடுத்தால் போதும் என செந்தில் பாலாஜி பேசியது குறித்து கேட்டபோது..,

இது ரொம்ப வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாட்டிலுக்கு கமிஷன் வாங்கும் இவர்கள், இன்று டெல்லிக்குச் சென்று தமிழ், தமிழ் என பேசுபவர்கள் உச்ச நீதிமன்றத்தில் பேசுவதற்கு வடநாட்டு நபர்கள் தான் இவர்களுக்கு தேவைப்படுகிறார்கள்.

தன்மானம் குறித்து பேசும் இவர்கள், முதல்வரை பார்த்தும், பிரதமரை பார்த்தும் உடனடியாக எழுந்து நின்று மரியாதை கொடுப்பதில்லை. ஆனால் முதலமைச்சரின் உறவினர் ஒருவருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறார்கள். இவர்கள் தன்மானம் குறித்து பேசுகிறார்கள்.

இந்திய பொருளாதாரத்தை மூன்றாவது இடத்திற்கு கொண்டு செல்வதற்காக மூன்றாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாரமனுக்கு எழுந்து நின்று நேரில் வந்து கை கொடுத்து மரியாதை செலுத்துகிறார் பிரதமர். ஆனால் 9000 கோடிக்கு மேல் கடனை வாங்கி வைத்துக்கொண்டு இவர்கள் அவர்களைப் பற்றி கேலி செய்கிறார்கள்.

இவர்கள்தான் மக்களை ஏளனமாக பார்க்கிறார்கள். தேர்தல் வரும் பொழுது மது கடைகளை மூடுவோம் என பல தரப்பட்ட வாக்குறுதிகளை அளித்து விட்டு, அதன் பிறகு நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள் என கூறுகிறார்கள் என்றால் யார் மக்களை ஏளனமாக பார்க்கிறார்கள்.

ஆனால் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் பிறந்து நிதி அமைச்சராக மூன்றாவது முறையாக திறம்பட செயல்பட்டு பெருமை சேர்த்து தான் கொண்டிருக்கிறார்.