கன்னியாகுமரி நகராட்சியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திரளாக மக்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி நகராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி நகராட்சியின் சார்பில், தமிழக அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாம் தொடக்க நிகழ்வுக்கு நகர்மன்ற ஆணையர் கன்னியப்பன் தலைமை வகித்தார். முகாமை நகர்மன்றத் தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்.
இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் டெல்பின் ஜேக்கப், சகாய சர்ஜினாள், சிவசுடலைமணி, இக்பால், முன்னாள் கவுன்சிலர் டி.தாமஸ், கிராம அலுவலர் சாத்தாவு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
