• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிரதமரை சந்திக்க இருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்..

Byகாயத்ரி

Mar 28, 2022

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் துபாய்க்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்று இருக்கும் நிலையில் அவர் இன்று தமிழகம் திரும்புகிறார்.

இந்த நிலையில் மார்ச் 31ஆம் தேதி 3 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். இதில் 31 ஆம் தேதி பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருப்பதாகவும், மறுநாள் ஏப்ரல் 1ஆம் தேதி டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை திறக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் முக்கிய அரசியல் தலைவர்களையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திக்க உள்ளார் என்பதும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பாஜகவுக்கு எதிரான பிரமாண்டமான அணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்வார் என்றும் கூறப்படுகிறது.