இலுப்பூரில் கடைத்தெருவில் இருபுறமும் நின்று வரவேற்ற மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்கள் சந்திப்பின் நிறைவில் கடை தெருவில் உள்ள தேநீர் கடையில் தேநீர் குடித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது

எடப்பாடி பழனிச்சாமி விரக்தியில் பேசுகிறார். பாஜகவில் இருந்து எத்தனை தலைவர்கள் வந்து தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தாலும் எடுபடாது. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் அமைந்திருக்கும் மதச்சார்பற்ற கூட்டணியை வெல்ல முடியாது. தமிழ்நாட்டில் தேர்தல் அதிகாரி காவல்துறை அதிகாரிகளை மாற்றட்டும் என்னவென்றாலும் செய்யட்டும் அவர்களால் ஒன்றும் செய்ய. அதிமுக பாஜகவிடம் அடமானம் போய்விட்டது. குத்தகைக்குப் போய் விட்டார்கள் அடிமையாகி விட்டார்கள். ஒரு திராவிட கட்சி இவ்வாறு போய்விட்டது குறித்து வெட்கப்படுகிறோம் வேதனைப்படுகிறோம்.

நடிகர்கள் பிரச்சாரத்திற்கு வருவது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை நாங்கள் இங்கு பாட்டுக்கு எங்களது தேர்தல் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது இருக்கும் சூழ்நிலையில் இந்த தொகுதியில் இருக்கும் மக்களிடம் உள்ள எழுச்சியைப் பார்த்தால் தமிழ்நாட்டில் 234 தொகுதியும் திமுக வெல்லும் என்பது தெரிய வருகிறது. திரைப்பட நடிகரின் பின்னால் இளைஞர்கள் போவது குறித்து நாட்டு மக்கள் பார்த்துக் கொள்வார்கள். அதற்கான தீர்ப்பையும் விரைவில் தெரிவிப்பார்கள் என்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். பின்னர் அங்கிருந்து விராலிமலைக்கு புறப்பட்டு சென்றார்.




