• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிதம்பரம் கோவில் விவகாரம் -பொதுமக்களிடம் கருத்து கேட்பு

ByA.Tamilselvan

Jun 12, 2022

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை பொதுமக்களிடம் கருத்துக்கேட்க புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.இதற்கு பொது தீட்சிதர்கள் சரியான ஒத்துழைப்பு வழங்காததால் திட்டமிட்டப்படி ஆய்வு நடைபெறவில்லை என இந்து சமய அறநிலையத் துறை ஆய்வு குழு தெரிவித்தது.மேலும் இந்த ஆய்வு சம்மந்தமான அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் சமர்பிக்க இருப்பதாகவும் அதன் பின் சட்டபடியான நடவடிக்கை மேற்கொள்ள போவதாகவும் ஆய்வுக்கு வந்த விசாரணை குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆய்வு குறித்தான அறிக்கையை ஆய்வு குழு நாளை அறநிலையத்துறை ஆணையரிடம் சமர்பிக்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை விசாரணை குழுவிடம் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது..குழுவிடம் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது.